நாங்கள்...

வணக்கம்,

நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாக எங்களது அறநிதிவாரியத்தின் வாயிலாக, எங்களால் இயன்ற அடிப்படை தேவைகளை கூலிம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு வழங்குகின்றோம்.

இந்த இணைய பக்கத்தை வளம் வரும் நல் உள்ளங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு,
இயன்றவரை அனைத்து பக்கங்களையும் பார்வையிட்டு, மனிதாபிமான அடிப்படையில்; சமுதாய நலனில் விழிப்புணர்வுகொண்டு; பற்றும் பரிவும்கொண்டு;

நிலை குன்றியவர்களுக்கும், சமுதாயத்தின் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வாழ்பவருக்கும், கல்வி வசதி அறியா இளம் நெஞ்சங்களுக்கும்;
எங்கள் வாரியத்தின் துணைக்கொண்டு இயன்ற உதவிகளை அளித்திட...

அன்புடன் அழைக்கின்றோம் ... வருக வருகவென...

sun

Saturday, 17 March 2007

அறம் செய்க

அறம் செய்க
- பாவேந்தர் பாரதிதாசன்

தொடங்குக பணியைத் தொடங்குக அறத்தை!
கடலிலும், வானிலும், கவினுறு நிலத்திலும்,
வாழ்வுயிர் அனைத்தும் மக்கள் கூட்டமும்,
வாழுமாறு - அன்பு மணிக்குடை யின்கீழ்
உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்!

புலர்கள் 'உலகப் பொன்னி லக்கியம்'
ஆக்கினார்! மறவரோ, அறிவு - அறி யாமையைத்
தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக்
கண்கள் மூடாமல் எண்டிசை வைத்தும்
வண்கையை இடப்புறத்து வாளில் வைத்தும்
அறம்புரிந்து இன்ப அருவி ஆடினார்!

தொடங்குக பணியை! அடங்கல் உலகும்
இடும்நம தாணை ஏற்று நடக்கவும்
தடங்கற் சுவரும் சாய்ந்துதூ ளாகவும்
தொடங்குக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
தடம்பெருந்தோளால் தொடங்குக 'பணியை'!

இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்!
சாதிக்குச் சாவுமணி அடிக்க! பழம்நிகர்
தமிழகம் வையத் தலையாய்
அமையத் தொடங்குக 'அறம் இன்பம்' என்றே!

No comments: