
வைரமுத்துவின் பதில்:
அவமானம் தாங்குதல்.சுயமானமே பெரிதென்று கருதுகின்றவர்கள் பொதுமானம் காக்க முடியாது.
அனாதைப் பிள்ளைகளுக்கு நிதி திரட்டக் கடை வீதிக்குப் போகிறார் அன்னை தெரசா. ஒரு கடைக்காரன் கஞ்சன், தேனிலவுக்குக் கூடத் தனியாய்ப் போய்வந்தவன்.
அவனிடம் கையேந்துகிறார் அன்னை...‘‘ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு...’’‘‘ஒண்ணும் தரமுடியாது; ஓடிப்போ கெழவி’’ ஏந்திய கை மடங்கவில்லை.‘‘ஏதாவது கொடுங்கள்... என் பிள்ளைகளுக்கு...’’‘‘சொன்னாக் கேக்கமாட்ட...’’ஏந்திய இடக்கையில் வந்து விழுகிறது அவன் காறித்துப்பிய கற்றை.
எச்சில் விழுந்த இடக்கையை மூடிக்கொண்டு‘‘நீ காறித்துப்பியது எனக்கு; என் பிள்ளைகளுக்கு...’’ என்று வலக்கை நீட்டுகிறார் அன்னை.
எழுந்து நின்று கும்பிட்டு, கண் துடைத்துக்கொண்டே காசு போடுகிறான் கடைக்காரன்..
No comments:
Post a Comment