நாங்கள்...

வணக்கம்,

நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாக எங்களது அறநிதிவாரியத்தின் வாயிலாக, எங்களால் இயன்ற அடிப்படை தேவைகளை கூலிம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு வழங்குகின்றோம்.

இந்த இணைய பக்கத்தை வளம் வரும் நல் உள்ளங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு,
இயன்றவரை அனைத்து பக்கங்களையும் பார்வையிட்டு, மனிதாபிமான அடிப்படையில்; சமுதாய நலனில் விழிப்புணர்வுகொண்டு; பற்றும் பரிவும்கொண்டு;

நிலை குன்றியவர்களுக்கும், சமுதாயத்தின் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வாழ்பவருக்கும், கல்வி வசதி அறியா இளம் நெஞ்சங்களுக்கும்;
எங்கள் வாரியத்தின் துணைக்கொண்டு இயன்ற உதவிகளை அளித்திட...

அன்புடன் அழைக்கின்றோம் ... வருக வருகவென...

sun

Tuesday, 10 December 2013

தீபாவளி நல்லெண்ண நிகழ்வு 2013

அன்புடையீர் வணக்கம்,

உதயசூரியன் அறநிதி வாரித்தின் சார்பாக, இந்த 2013-ம் ஆண்டின் தீபாவளி நல்லெண்ண நிகழ்வில் எங்களுடன் இணைந்து கடந்த பத்து வருடங்களாக வற்றாத ஆதரவை நல்கிவரும் உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றி மலர்களை சம்ர்பிக்கின்றோம்.

ஓர் எழுச்சிமிக்க பாரம்பரியத்தின் உன்னத நினைவாக, நமது சமுதாயத்தின் பண்பாட்டின் நாகரீகம் "அறம் காத்தல்" என்ற கொள்கை உணர்வோடும், உங்களது தூய உள்ளத்தோடும், இயன்றதை இயலாதவர் தமக்கு ஈகை மனப்பாண்மையுடன் அளித்த நன்கொடைகள் வாயிலாக, அடிப்படை வசதி குறைந்து, சமுதாய ஆதரவு இழந்து கூலிம் மற்றும் பாடாங் செராய் (Kulim & Padang Serai) சுற்றுவட்டாரங்களில் வாழ்கின்ற சுமார் குடும்பங்களூக்கு வழங்கப்பட்ட விவரங்கள் பின்வருமாறு; 

1) 15 குடும்பங்களுக்கு தலா $163 அடக்கமுள்ள மளிகைபொருட்களும் தலா $100 ரொக்கப்பணமும்
2) தலா $150 ரொக்கம் பாடாங் செராய் அமால் ஜாசா இயக்கத்திற்கு நன்கொடை
3) தலா $150 ரொக்கம் தாமான் கெனாரி திரு.லட்சுமணன் அவர்களுக்கு மருத்துவ செலவிற்கான நன்கொடை
4) தாமான் டேசா அமான் பாடாங் செராய் பது கிரேஸ் இல்லத்திற்கு $400 பெறுமானமுள்ள 200kg அரிசி மற்றும் 50kg சீனியும் வழங்கப்பட்டது


உங்கள் அனைவரின் தயவின்றி நாங்கள் இந்நிகழ்வை சிறப்பாக நடத்தியிருக்க சாத்தியமில்லை என்பது திண்ணமே.
அவர்கள் இல்லத்தில் ஏற்றிய தீபஒளி உங்கள் அனைவரின் கனிவில் தோன்றிய இன்ப ஒளியாகும். இவ்வொளி நமது சமுதாயத்திற்கு என்றென்றும் சுடரொளியாக மலர வேண்டுகிறோம்.   

வருடத்தில் ஒருமுறை வரும் தீபாவளித் திருநாள் மட்டும் அவர்களுக்கு உதவுவதோடு நில்லாமல், இயன்றவரை அவர்களது அன்றாட தேவைகளுக்கான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க இயன்ற முயற்சிகளை செய்து வருகிறோம். அவ்வகையில் உங்களது வற்றாத ஆதரவும் தயவும் நமது சமுதாயத்திற்கு தேவை என்பதால், எங்களுடன் இணைந்து உதவிக்கரம் நீட்ட அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த இனிய வேளையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள்து இனிய 2014-ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் வாழ்வில் எல்லா நலனும் பெற்று, வான் சிறக்க வையகம் போற்றி சிறந்திட என்றென்றும் வாழ்த்துகிறோம்.


இன்றிருப்பார் நாளை வீற்றிருப்பார் 
என்றுயிர்ப் பிறியும் என்றறியார் வாழ்வில்...
இன்னுயிர் காத்தே பிறர்துயர் துடைத்தே 
என்றும் நல்லறம் ஓங்குக இனிதே...

*** ¿ýÈ¢ ÁÄ÷¸§Ç¡Î... ±ý¦ÈýÚõ ¯¾ÂÝâÂý ÌØÅ¢É÷ ***

No comments: